போப் பிரான்சிஸின் ஐநா காலநிலை மாநாட்டிற்கான துபாய் பயணம் ரத்து

COP28: மற்றும் நுரையீரல் வீக்கத்தில் இருந்து மீண்டு வரும் போப் பிரான்சிஸ், மருத்துவர்களின் உத்தரவின் பேரில் ஐநா காலநிலை மாநாட்டிற்கான துபாய் பயணத்தை ரத்து செய்ததாக வாட்டிகன் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இரண்டாவது முறையாக போப்பின் பலவீனமான உடல்நிலை வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. முழங்கால் அழற்சியின் காரணமாக 2022 -ல் காங்கோ மற்றும் தெற்கு சூடானுக்கு திட்டமிடப்பட்ட பயணத்தை அவர் ஒத்திவைக்க வேண்டியிருந்தது, இருப்பினும் அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது.
பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை தனக்கு நுரையீரல் அழற்சி இருப்பதை வெளிப்படுத்தினார், ஆனால் COP28 காலநிலை மாற்ற மாநாட்டில் உரையாற்ற துபாய் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இது தொடர்பாக வாட்டிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி கூறுகையில், போப் பிரான்சிஸ் காய்ச்சல் மற்றும் சுவாசக் குழாயின் அழற்சியிலிருந்து முன்னேற்றம் அடைந்து வருகிறார். ஆனால், “வரும் நாட்களில் துபாய் பயணத்தை திட்டமிட வேண்டாம் என்று போப்பிடம் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். டாக்டர்களின் கோரிக்கையை போப் பிரான்சிஸ் மிகுந்த வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டார், எனவே பயணம் ரத்து செய்யப்படுகிறது,” என்று கூறினார்.
அடுத்த மாதம் 87 வயதை அடையும் போப் பிரான்சிஸ், இளம் வயதிலேயே ஒரு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.



