COP28: இந்திய பிரதமர் ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்தார்

Dubai:
துபாயில் தொடங்கிய COP28 ஐநா காலநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். இன்று துபாய் எக்ஸ்போ சிட்டியில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்று மாலையே பிரதமர் நாடு திரும்புவார்.
COP28 மாநாட்டில் டிசம்பர் 12 வரை உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் காலநிலை நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுவார் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார். COP28 இல் உரையாற்றுவதைத் தவிர, பிரதமர் மூன்று உயர்மட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார்.
இந்த ஆண்டு அக்டோபரில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட பசுமைக் கடன் திட்டத்தின் அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. LeadIT 2.0 -ன் திறப்பு விழா இந்தியா மற்றும் ஸ்வீடன் இணைந்து நடத்தும் நிகழ்வாகும். இது ஆற்றல் மாற்றத்திற்கான தலைமைக் குழுவாகும். இது 2019 இல் நியூயார்க்கில் நடந்த ஐநா காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் இந்தியா மற்றும் ஸ்வீடனால் தொடங்கப்பட்ட கூட்டு முயற்சியாகும். இந்த முயற்சி முடிவெடுப்பவர்களிடையே ஒத்துழைப்பை வளர்க்கிறது, தொழில்துறை மாற்றத்தை விரைவுபடுத்தும் குறிக்கோளுடன் பொது மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைக்கிறது. மேலும் COP28 -ல், பல தலைவர்களுடனான இருதரப்பு சந்திப்புகளில் பிரதமர் பங்கேற்பார் என்று குவாத்ரா கூறினார்.



