அமீரக செய்திகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்றய வானிலை… சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்றய வானிலை குறித்த தகவலை தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சில குமுலஸ் மேகங்கள் பிற்பகலில் கிழக்கில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இரவில் வானிலை ஈரப்பதமாக மாறும்.
சனிக்கிழமை காலை, சில வடக்குப் பகுதிகளில் லேசான மூடுபனி இருக்கும். ஓமன் கடலில் அலைகள் லேசானதாகவும், அரேபிய வளைகுடாவில் சில சமயங்களில் லேசானது முதல் நடுத்தரமாகவும் அலைகள் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அபுதாபியில் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸும், துபாயில் 41 டிகிரி செல்சியஸும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், சராசரியாக வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
#tamilgulf