மிதமானது முதல் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அபாயகரமான வானிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
அபுதாபி மற்றும் புஜைராவின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்துகிறது, துபாயிலும் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழை மற்றும் பலத்த காற்றின் போது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. திடீர் வெள்ளம், அதிதீவிர மழை மற்றும் ஆலங்கட்டி மழை போன்ற பகுதிகளை தவிர்க்குமாறு குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
வானிலை முன்னறிவிப்பு
நாடு முழுவதும் மேக மூட்டம் படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, சில பகுதிகளில் பகல் நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் சிதறிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு படிப்படியாக அதிகரித்து, மிதமான முதல் தீவிர கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
இடி மற்றும் மின்னல் அவ்வப்போது நிகழும், குறிப்பாக நள்ளிரவு முதல் நாளை நண்பகல் வரை, கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களின் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும். செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து படிப்படியாக மழைக்கான வாய்ப்பு குறையும்.