அமீரக செய்திகள்
பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தையொட்டி இந்தியாவை கவுரவித்த புர்ஜ் கலிஃபா

உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவதற்கு முன்னதாக, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா ‘கௌரவ விருந்தினர் – இந்திய குடியரசு’ என்ற வார்த்தைகளால் ஒளிர்ந்தது.
பிரதமர் மோடிக்கு துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உற்சாக வரவேற்பு அளித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகள் சர்வதேச ஒத்துழைப்புக்கு முன்மாதிரியாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாடு 2024 இல் கெளரவ விருந்தினராகப் பங்கேற்று உச்சிமாநாட்டில் சிறப்பு உரை நிகழ்த்தினார்.
#tamilgulf