ஆகஸ்ட் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை அறிவித்தது…!!

அமீரக எரிபொருள் விலைக் குழு ஆகஸ்ட் 2023 மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அறிவித்துள்ளது. இது கடந்த மாதத்தை விட சிறிது அதிகரித்து காணப்படுகிறது. புதிய விலைகள் ஆகஸ்ட் 1 முதல் பொருந்தும் மற்றும் பின்வருமாறு:
சூப்பர் 98 பெட்ரோல் விலை ஜூலை மாதத்தில் லிட்டருக்கு3 திர்ஹம்களாகும், இது ஜூலை மாதத்தை விட 0.14 திர்ஹம்கள் அதிகரித்து 3.14 திர்ஹம்ஸ்க்கு விற்பனையாகும்.
ஸ்பெஷல் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.02 திர்ஹம்கள் ஆகும், இது கடந்த மாத விலை 2.89 திர்ஹம்விட 0.13 திர்ஹம்கள் அதிகரித்தது.
இ-பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.95 திர்ஹம்களாக இருக்கும், ஜூலை மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.81 திர்ஹம்களாக இருந்தது.
டீசலுக்கான விலை கடந்த மாதம் 2.76 திர்ஹம்களுடன் ஒப்பிடும்போது ஒரு லிட்டருக்கு 0.19 திர்ஹம்கள் அதிகரித்து 2.95 திர்ஹம்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.