அமீரக செய்திகள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் 11,500 குடியிருப்புகள் ஒதுக்கீடு- ஷேக் ஹம்தான்

கடந்த இரண்டு ஆண்டுகளில் குடிமக்களுக்கு 11,500 க்கும் மேற்பட்ட குடியிருப்பு நிலங்கள் ஒதுக்கப்பட்டு, 8 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டிற்கான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில், அல் யலாயிஸ் மற்றும் லதிஃபா நகரில் மொத்தம் 3,300 குடியிருப்பு நிலங்கள் சமீபத்தில் விநியோகிக்கப்பட்டன.
அமீரகத்தில் மொத்தம் 1,367 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று ஷேக் ஹம்தான் மேலும் கூறினார்.
வளர்ச்சி மற்றும் குடிமக்கள் விவகாரங்களுக்கான உயர் கமிட்டியின் கீழ் வரும் துபாயில் வீட்டுத் திட்டங்களை மதிப்பாய்வு செய்த பின்னர் துபாய் பட்டத்து இளவரசர் இதனை அறிவித்தார்.
#tamilgulf