புதிய இடத்திற்கு நேரடி விமானங்களை அறிவித்த ஏர் அரேபியா

ஷார்ஜா விமான நிலைய ஆணையம் (SAA) மற்றும் ஏர் அரேபியா ஆகியவை கிரேக்க தலைநகரான ஏதென்ஸை ஷார்ஜா விமான நிலையத்தின் மூலம் பயணிகளுக்கான சமீபத்திய நேரடி பயண இடமாக சேர்த்துள்ளது.
இந்த விமானப் பாதைகளில் முதலாவது ஷார்ஜாவிலிருந்து ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு நடப்பு வாரத்தில் தொடங்கப்பட்டது.
புதிய பாதையானது, பயண மற்றும் சுற்றுலா ஆர்வலர்களுக்கு வாரந்தோறும் 4 விமானங்களை அனுமதிக்கும், செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். எதிர்காலத்தில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடக்க விமான விழாவில் ஷார்ஜா விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அலி சலீம் அல் மிட்ஃபா, ஏர் அரேபியாவின் குழும தலைமை நிர்வாக அதிகாரி அடெல் அல் அலி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான ஹெலனிக் குடியரசின் தூதர் அன்டோனிஸ் அலெக்ஸாண்ட்ரிடிஸ் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.