அமீரக செய்திகள்
ரம்ஜானை முன்னிட்டு அஜ்மானில் 314 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது

சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும், அஜ்மான் ஆட்சியாளருமான ஷேக் ஹுமைத் பின் ரஷித் அல் நுஐமி, 314 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை மூலம், இந்த நபர்கள் தங்கள் வாழ்க்கையை புதிதாகத் தொடங்குவதற்கும் அவர்களின் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.
அவர்களை விடுவிப்பதற்கான நடைமுறைகள் உடனடியாக தொடங்கப்பட்டதாக அஜ்மான் காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷேக் சுல்தான் பின் அப்துல்லா அல் நுஐமி தெரிவித்தார்.
இத்தகைய மன்னிப்புகள் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு சந்தர்ப்பங்களில் தகுதியான கைதிகளுக்கு வழங்கப்படுகின்றன.
#tamilgulf