அமீரக செய்திகள்
டீசல் டேங்கர் கார் மீது மோதியதில் மூன்று குழந்தைகள் உயிரிழப்பு

ஃபுஜைராவில் டீசல் டேங்கர் கார் மீது மோதியதில் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததாக ஃபுஜைரா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
திப்பா கோப் சாலையில் நடந்த இந்த பயங்கர விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்தனர். இறந்த மூன்று குழந்தைகளும் 1, 5 மற்றும் 8 வயதுடைய உடன்பிறந்தவர்கள்.
அகமது முஹம்மது அலி சயீத் அல் யமாஹி (1 வயது), ஈத் முஹம்மது அலி சயீத் அல் யமாஹி (5 வயது), மீரா முஹம்மது அலி சயீத் அல் யமாஹி (8 வயது) என அடையாளம் காணப்பட்டதாக ஃபுஜைரா கல்லறை விவகார அலுவலகம் தெரிவித்துள்ளது. .
இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோப் மயானத்தில் நடைபெற்றது.
#tamilgulf