அமீரக செய்திகள்

Abu Dhabi: விசா விண்ணப்பங்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனை மையம் திறக்கப்பட்டது

Abu Dhabi:
ஆம்புலேட்டரி ஹெல்த்கேர் சர்வீசஸ் (AHS), மத்திய கிழக்கின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதார தளமான PureHealth-ன் துணை நிறுவனமான SEHA, விசா விண்ணப்பங்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனை மையத்தை அபுதாபியில் திறப்பதாக அறிவித்துள்ளது.

புதிய நோய் தடுப்பு மற்றும் ஸ்கிரீனிங் மையம் அபுதாபி பொது சுகாதார மையத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ விழாவில் அபுதாபி பொது சுகாதார மையத்தின் இயக்குநர் ஜெனரல் மாடர் சயீத் அல் நுஐமி கலந்து கொண்டார். மேலும், டாக்டர் அஸ்மா அல் ஹலாசே, ஆம்புலேட்டரி ஹெல்த்கேர் சர்வீசஸின் தலைமை நிர்வாக அலுவலகம்; அபுதாபி குளோபல் மார்க்கெட் ரெஜிஸ்ட்ரேஷன் அத்தாரிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி ஹமத் அல் மஸ்ரூயி மற்றும் அல் மரியா சில்லறை விற்பனை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ராபிசன் மற்றும் AHS மற்றும் அபுதாபி பொது சுகாதார மையத்தின் உயர் நிர்வாகத்தின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

இந்த மையம் வாரத்தில் ஏழு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை சேவைகளை வழங்கப்படும். மேலும், சந்திப்பு அடிப்படையிலான மற்றும் வாக்-இன் வாடிக்கையாளர்களையும் ஏற்றுக்கொள்கிறது. இது பிரீமியம், ஃபாஸ்ட் டிராக் மற்றும் வழக்கமான விசா ஸ்கிரீனிங் சேவைகளை வழங்கும்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button