பள்ளி பேருந்துகளுக்கான “நிறுத்து” பலகையைக் கண்டு நிறுத்தாமல் சென்றால் 1,000 திர்ஹம் அபராதம்

Abu Dhabi:
பள்ளிப் பேருந்துகளின் பக்கவாட்டுக் கை இரு திசைகளிலும் திறக்கும் போது(side arm of school buses), ஐந்து மீட்டருக்குக் குறையாமல், மாணவர்கள் பாதுகாப்பாக கடப்பதை உறுதிசெய்யும் வகையில் வாகன ஓட்டுநர்களை முழுமையாக வாகனங்களை நிறுத்துமாறு அபுதாபி காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.
பள்ளி பேருந்துகளுக்கான “நிறுத்து” பலகையைக் கண்டு ஓட்டுநர்கள் நிறுத்தாமல் சென்றால், 10 போக்குவரத்து கருப்பு புள்ளிகளுடன் 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில், அபுதாபி காவல்துறை மாணவர்களை பள்ளிக்கு கொண்டு செல்லும் போது மற்றும் திரும்பும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஐந்து விதிமுறைகளை கடைபிடிக்க பள்ளி பேருந்து ஓட்டுநர்களை கட்டாயப்படுத்தியது.
- பள்ளிப் பேருந்தை ஓட்டும் போது ஃபோனைப் பயன்படுத்தக் கூடாது
- சட்டப்பூர்வ வேக வரம்புகளுக்குள் வாகனத்தை வைத்திருக்க வேண்டும்
- விதிமுறைகளின்படி பேருந்தைப் பராமரிக்க வேண்டும்
- மாணவர்கள் ஏறும்போதும் இறங்கும்போதும் ஸ்டாப் லீவரைப் பயன்படுத்த வேண்டும்
- மாணவர்கள் பாதுகாப்பு பெல்ட் கட்டுவதை உறுதி செய்ய வேண்டும்
வாகனம் ஓட்டும் போது கவனம் செலுத்துமாறும், பாதசாரிகள், சாலை அடையாளங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கவனம் செலுத்துமாறும் போலிசார் ஓட்டுனர்களை வலியுறுத்தியுள்ளனர்.