வாகன ஓட்டிகள் போக்குவரத்து பாதை விதிகளை மீறினால் 400 திர்ஹம்ஸ் அபராதம்

Abu Dhabi:
வாகன ஓட்டிகள் போக்குவரத்து பாதை(Lane) விதிகளை கடைபிடிக்க வேண்டும். மீறுதலில் ஈடுபடுபவர்களுக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபி போலீசார் அறியுறுத்தியுள்ளனர். இந்த ஆலோசனையானது, இந்த மாதம் தொடங்கப்பட்ட அவர்களின் ‘டிராஃபிக் ஹைலைட்ஸ்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
அபுதாபி காவல்துறையின் மன்சூர் ரஷித் அல் சைடி கூறுகையில், “கட்டாயப் பாதைகள் போக்குவரத்து அடையாளங்கள் மற்றும் சாலை அடையாளங்களுடன் குறிக்கப்படுகின்றன. சாலைப் பாதுகாப்பிற்காக போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற வேண்டும். அபுதாபியில் கடுமையான விபத்துக்களுக்கு பாதை மீறல்களே முக்கியப் பங்காற்றுகின்றன என்றார்.
போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம், அபுதாபி காவல்துறையின் பாதுகாப்பு ஊடகத் துறையுடன் இணைந்து, ஜனவரி மாதம் அதன் சமூக ஊடக தளங்களில் தொடர்ச்சியான ‘போக்குவரத்து சிறப்பம்சங்கள்’ எபிசோட்களை அறிமுகப்படுத்தியது.
போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குனரகத்தின் இயக்குனர் கர்னல் முஸல்லம் முகமது அல் ஜுனைபி கூறுகையில், ‘போக்குவரத்து சிறப்பம்சங்கள்’ எபிசோடுகள், அபுதாபி காவல்துறையின் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பொறுப்புடன் வாகனம் ஓட்டும் கலாச்சாரத்தை மேம்படுத்துதல் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்தல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.
சில ஓட்டுநர்களின் எதிர்மறையான நடத்தை மற்றும் கடுமையான தவறுகள் சாலைப் பாதுகாப்பிற்கு கணிசமான ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. விழிப்புணர்வை மேம்படுத்துவது, போக்குவரத்து விழிப்புணர்வுள்ள சமுதாயத்தை வளர்ப்பது, போக்குவரத்துச் சட்டங்களைப் பின்பற்றுவதை வலுப்படுத்துவது மற்றும் சமூக ஈடுபாட்டை வளர்ப்பது காவல்துறையின் கடமையாகும் என்றார்.