அமீரக செய்திகள்
துபாயின் ஜெபல் அலியில் உள்ள கிடங்கில் தீ விபத்து

Dubai:
துபாயின் ஜெபல் அலியில் உள்ள கிடங்கில் புதன்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக துபாய் சிவில் டிஃபென்ஸ் உறுதி செய்துள்ளது. இந்த விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
புதன்கிழமை பிற்பகலில் தீ விபத்து குறித்து துபாய் குடிமைத் தற்காப்பு நடவடிக்கை மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த தீயணைப்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
#tamilgulf