சிவில் பாதுகாப்பு வாகனங்களுக்கு வழி விடாவிட்டால் 50,000 திர்ஹம் அபராதம்

சிவில் பாதுகாப்பு வாகனம் செல்லும் போது போதுமான இடத்தை விடாமல் இருப்பது அல்லது அவற்றின் செயல்பாட்டை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டால் 50,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
அபுதாபி சிவில் டிஃபென்ஸ், கிடங்குகள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விதியை (2012 இன் தீர்மானம் எண்.24) நினைவூட்டியுள்ளது.
அபராதம் விதிக்கப்பட்ட பிறகு, குற்றவாளிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தவறைத் திருத்துவதற்கான உத்தரவுகளைப் பெறுவார்கள். அதனை நிறைவேற்றாத பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும்.
மேலும், அவசரநிலை, ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு வழிவிடாத UAE வாகன ஓட்டிகளுக்கு 3,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 6 கருப்பு புள்ளிகளுடன் அவர்களின் கார்கள் 30 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படும்.
அவசரநிலைகள், பேரழிவுகள் மற்றும் நெருக்கடி காலங்களில் செயல்படும் மீட்பு வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் ஓட்டுநர்களுக்கு 1,000 திர்ஹம் அபராதம், நான்கு கருப்பு புள்ளிகள் மற்றும் 60 நாட்களுக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.