அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை உயிரிழப்பு

ஷார்ஜாவின் புடானிக்கில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
அல் காசிமியா பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் இருபதாவது மாடியில் இருந்து தனது அறையின் ஜன்னல் வழியாக தனது குடும்பத்தினர் யாரும் கவனிக்காத நிலையில் குழந்தை தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது..
செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் போலீஸ் செயல்பாட்டு அறைக்கு ஒரு தகவல் கிடைத்தது, அதில் ஒரு குழந்தை கட்டிடத்தின் இருபதாவது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலில் இருந்து விழுந்ததாகக் கூறப்பட்டது.
போலீசார் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றபோது, குழந்தையின் உடலின் பாகங்கள் தரையில் சிதறிக்கிடந்தன, சம்பவ இடத்தில் இருந்து இறந்த குழந்தையின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விபத்து குறித்து ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதி, மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஜாரி அல்ஷாம்சி, குழந்தையின் தாயிடம் கேட்டபோது, தனது மகன் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலுக்கு வெளியே விழுந்ததாக அவர் தெரிவித்தார். சம்பவத்தின் போது அவர் சமையலறைக்குள் இருந்துள்ளார். குழந்தையை கவனிக்காமல், குழந்தையின் படுக்கையை தவறான இடத்தில் வைத்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சோகம் குழந்தை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அப்பட்டமாக நினைவூட்டுகிறது. அனைத்து குடும்பங்களும் தங்கள் குழந்தைகளின் மீது தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதி, மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஜாரி அல்ஷாம்சி வலியுறுத்தினார்.