அமீரக செய்திகள்
இந்தியப் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
இந்தியப் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) தேசிய நில அதிர்வு வலையமைப்பின் நிலையங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரப்படி இரவு 7.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
#tamilgulf