சாலையின் நடுவில் கார் நின்றதால் விபத்துக்குள்ளான 4 வாகனங்கள்
போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் ஆபத்துகளையும் அதனால் ஏற்படும் கடுமையான விபத்துகளையும் குறித்து அபுதாபி போலீசார் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அதிகாரிகளின் இந்த முயற்சியானது, கவனக் குறைவாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செவ்வாயன்று, சாலையின் நடுவில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்காட்டும் 45 வினாடிகள் கொண்ட கிளிப்பை காவல்துறை பகிர்ந்துள்ளது. ஓட்டுநர்கள் சட்ட விரோதமாக சாலையில் வாகனங்களை நிறுத்திய போது, பயங்கரமான பல கார் மோதிய நான்கு தனித்தனி சம்பவ காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.
கண்காணிப்பு வீடியோவில் மற்ற கார்கள் மோதுவதைத் தவிர்க்கவும் பாதைகளை மாற்றவும் முயற்சிப்பதைக் காட்டியது, ஆனால் நெடுஞ்சாலையில் அதிக வேக வரம்பு காரணமாக நிறுத்த முடியாமல் வாகனம் மற்ற கார்கள் மீது மோதியது.
முதலில், ஒரு SUV கார் அபாய விளக்குகளுடன் சாலையின் நடுவில் நின்றது. அதைத் தொடர்ந்து, ஒரு வேன் பின்னால் இருந்து மோதி, அதை பல மீட்டர் தூரத்திற்கு கொண்டு சென்றது மற்றும் பிற வாகனங்கள் சம்பந்தப்பட்ட சங்கிலி எதிர்வினையால் கூடுதல் மோதல்களுக்கு வழி வகுத்தது.
இரண்டாவது சூழ்நிலையில், சாலையின் நடுவில் 4WD வாகனம் திடீரென நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நான்கு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. விபத்தைத் தவிர்க்க ஒரு கார் மற்றொரு பாதையில் செல்ல முயன்ற போதிலும், அது சரியான நேரத்தில் செய்ய முடியாமல் தொடர் மோதல்களுக்கு வழிவகுத்தது.