காசாவுக்கான உதவிகளை ஏற்றிக் கொண்டு UAE-ன் 3வது கப்பல் எகிப்துக்கு புறப்பட்டது

காசா பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் ஆபரேஷன் கேலன்ட் நைட் 3 ன் ஒரு பகுதியாக 4,630 டன் மனிதாபிமான பொருட்களை ஏற்றிக் கொண்டு மூன்றாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவிக் கப்பல் எகிப்தின் அல் அரிஷ் நகருக்கு புறப்பட்டது.
புஜைரா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலில் 4,218.3 டன் உணவு, 370.2 டன் தங்குமிட பொருட்கள், 41.6 டன் மருத்துவ உதவி, கூடுதலாக ஆறு தண்ணீர் தொட்டிகள், இரண்டு செப்டிக் டேங்க், ஒரு டீசல் சேமிப்பு தொட்டி ஆகியவை உள்ளன.
கப்பலின் சரக்குகளை எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட், சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அறக்கட்டளை மற்றும் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அறக்கட்டளை ஆகியவை வழங்கியுள்ளன. 267 டிரக்குகள் மூலம் கப்பலில் சரக்குகளை இறக்கினர்.
கூட்டு நடவடிக்கைக் கட்டளை சமீபத்தில் “குட்னஸ் பறவைகள்” நடவடிக்கையைத் தொடங்கியது, இது வடக்கு காசா பகுதியில் நிலம் மூலம் அடைய முடியாத தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வான்வழியாக அனுப்பியது. இதுவரை அனுப்பப்பட்ட மொத்த உதவியில் 486 டன் நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பொருட்கள் அடங்கும்.



