ஒவ்வொரு ஆண்டும் 350 மில்லியனர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து எமிரேட்ஸுக்கு மாறுகிறார்கள்- நிபுணர் தகவல்

கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 3,500 மில்லியனர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு குடிபெயர்ந்துள்ளனர், அதாவது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 350 பேர்.
நியூ வேர்ல்ட் வெல்த்தின் ஆராய்ச்சித் தலைவரான ஆண்ட்ரூ அமோயில்ஸ் கூறுகையில், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்காவின் பெரிய 3 செல்வச் சந்தைகளான தென்னாப்பிரிக்கா, எகிப்து மற்றும் நைஜீரியாவில் இருந்தும், தான்சானியா மற்றும் அல்ஜீரியாவிலிருந்தும் இடம்பெயர்ந்துள்ளனர்.
“ஆப்பிரிக்காவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு இடம் பெயர்வதற்கு பல காரணங்கள் உள்ளன, துபாய் உலகின் சிறந்த வணிக மற்றும் நிதி மையங்களில் ஒன்றாக இருப்பதால் ஏற்படும் வணிக வாய்ப்புகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குறைந்த வரிகள், ஆப்பிரிக்கா குறித்த பாதுகாப்பு கவலைகள்” என்று 2023 ஆப்ரிக்கா வெல்த் அறிக்கையை வெளியிட்ட பிறகு அமொயில்ஸ் கூறினார் .
ஆப்பிரிக்காவைத் தவிர, கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்திலிருந்து துபாய்க்கு 1,500 மில்லியனர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் ரிப்போர்ட் 2023 ல் 4,500 மில்லியனர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடம் பெயர்வார்கள் என்று கணித்துள்ளது, இது ஆஸ்திரேலியாவிற்கு அடுத்த படியாக இரண்டாவது மிக உயர்ந்த இடம் பெயர்வு ஆகும்.