துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திய 3 வெளிநாட்டவர்கள் கைது

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து இந்தியா வந்த மூன்று வெளிநாட்டவர்களிடம் இருந்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ரூ.2 கோடி (881,243.19 திர்ஹம்) மதிப்புள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
மூன்று பேரும் தங்களது பேண்ட்டின் இடுப்பில் தைக்கப்பட்ட துணியில் சுமார் 3.75 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளனர். முயன்றனர். மூன்று வெளிநாட்டவர்களும் சுங்கச் சட்டம், 1962 இன் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் தங்கம் கடத்தல் சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் நடந்த மூன்றாவது சம்பவம் இதுவாகும்.
டெல்லி விமான நிலையத்தில் 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் (Dh1057475.08) பாங்காக்கில் இருந்து பயணித்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, மூன்று வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் இந்த வார தொடக்கத்தில், தென் மாநிலமான தமிழ்நாட்டின் சென்னை விமான நிலையத்தில், பேஸ்ட் வடிவில் சுமார் 1.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.