அமீரக செய்திகள்

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 41.6 மில்லியன் பயணிகளைப் வரவேற்ற துபாய் இன்டர்நேஷனல் விமான நிலையம்

துபாய் இன்டர்நேஷனல் (டிஎக்ஸ்பி) விமான நிலையம் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 41.6 மில்லியன் பயணிகளைப் வரவேற்றுள்ளது. இது 2019 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களைத் தாண்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடும்போது 100 சதவீதத்திற்கும் அதிகமான பயணிகளைப் வரவேற்றுள்ளது.

DXB இன் 2022 முதல் பாதியில் 27.9 மில்லியன் பேர் வந்துள்ளனர். அதனுடன் ஒப்பிடும்போது 49.1 சதவீதம் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையம் இரண்டாவது காலாண்டில் ஒரு வலுவான பயணிகள் வருகையை பதிவுசெய்துள்ளது.

தொற்றுநோய்க்குப் பிந்தைய காலகட்டத்தில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறைகளின் வலுவான செயல்திறனால் விமானப் போக்குவரத்துத் துறை மீட்சி அடைந்துள்ளது. ஃபிளாக்ஷிப் கேரியர் எமிரேட்ஸ் போன்ற உள்ளூர் விமான நிறுவனங்களும் 2022-23 இல் சாதனை லாபத்தைப் பெற இது உதவியுள்ளது.

“துபாய் இன்டர்நேஷனலுக்கு இது ஒரு வெகுமதியான முதல் பாதியாகும், மேலும் விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாங்கள் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டுகளை வழங்குவதையும், ஒரு முன்மாதிரியான விருந்தினர் அனுபவத்தை வழங்குவதையும் அறிந்து பெருமிதம் கொள்கிறோம்” என்று துபாய் விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் கூறினார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button