அஜ்மான்: டேங்க் வெடித்ததில் 2 பேர் பலி, 3 பேர் காயம்

அஜ்மானின் பிரசித்திபெற்ற அல் ஜுர்ஃப் தொழில்பேட்டை பகுதியில் எரிபொருள் தொட்டி வெடித்ததில் ஆசியா நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
அஜ்மான் காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷேக் சுல்தான் பின் அப்துல்லா அல் நுஐமி கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஒரு தொழிற்சாலையில் வெடிப்பு நிகழ்ந்தது குறித்து தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக அஜ்மான் போலீசார் தெரிவித்தனர். அருகில் இருந்த மற்றோரு தொட்டியில் தொழிலாளர்கள் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தபோது, தீப்பொறி உள்ளே பறந்தது, வெடிப்புக்கு வழிவகுத்தது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சரிவர செய்யாததால் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக அஜ்மான் காவல்துறைத் தலைவர் கூறினார். ஆபத்தான தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்கள் பாதுகாப்பு விஷயங்களில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினார்.