அஜ்மானில் உரிமம் இல்லாமல் 797,000 இ-சிகரெட்டுகளை விற்ற 2 பேர் கைது

உரிமம் இல்லாமல் 797,000 இ-சிகரெட்டுகளை வர்த்தகம் செய்து சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அஜ்மான் போலீசார் இருவரை கைது செய்தனர்.
7,97,555 இ-சிகரெட்டுகளை உரிமம் இன்றி, வரி ஏய்ப்பு செய்ததற்காக, அதிக அளவில் விற்பனை செய்த மற்றும் சேமித்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், ஆசிய நாட்டினைச் சேர்ந்த இரு நபர்களை ஆணையம் கைது செய்தது.
தகவலறிந்த அதிகாரிகள் உடனடியாக ஒரு குழுவை உருவாக்கி, அந்த இடத்தை சோதனை செய்தனர், அங்கு பல நிறுவனங்களின் பெரிய அளவிலான இ-சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன, அவை ஆசிய நாட்டினரின் இரண்டு நபர்களுக்கு சொந்தமானது.
நூற்றுக்கணக்கான இலத்திரனியல் சிகரெட் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தக முத்திரைகளைக் கொண்ட 797,555 இலத்திரனியல் சிகரெட்டுகள் வில்லாவில் ஐந்து அறைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
குற்றம் சாட்டப்பட்ட, ஆசிய நாட்டவர்கள் வரி ஏய்ப்பு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு பெடரல் பிராசிகியூஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
அங்கீகரிக்கப்படாத விற்பனை நிலையங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் போது கவனமாக இருக்குமாறும், புகைபிடிப்பதால் சுகாதார மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்படும் ஆபத்துக்களை சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம் எனவும் அதிகார சபை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.