அமீரக செய்திகள்
கட்டிடங்களில் ஸ்மார்ட் சிஸ்டங்களை நிறுவத் தவறுவோருக்கு 10,000 திர்ஹம்ஸ் அபராதம்

அபுதாபியின் குடிமைத் தற்காப்பு ஆணையம், தங்கள் கட்டிடங்களில் ஸ்மார்ட் சிஸ்டங்களை நிறுவத் தவறுவோருக்கு மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது.
தொழில்நுட்பம் தேவைப்படும் கட்டிடங்களில் ஸ்மார்ட் சிஸ்டங்களை நிறுவாதவர்களுக்கு எதிராக 10,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
இந்த முடிவு மாநிலத்தில் சிவில் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்தும் 2012 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த மாத தொடக்கத்தில், தலைநகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது .
#tamilgulf