சினிமா

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ டீசர் வெளியீடு

‘லத்தி’ படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக ரிது வர்மா நடித்துள்ளார்

மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.

இந்த நிலையில், ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button