அமீரக செய்திகள்

விமானப் போக்குவரத்து மூலம் கடத்த முயன்ற 171,600 மாத்திரைகள் பறிமுதல்

கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மருந்துகளை விமானப் போக்குவரத்து மூலம் கடத்த முயன்ற இரண்டு தனித்தனி சம்பவங்களை துபாய் சுங்கத்துறை முறியடித்துள்ளது, இந்த இரண்டு சம்பவங்கள் மூலம் 171,600 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நடவடிக்கையின் போது சரக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட சிப்ராலெக்ஸ் என்ற 96,600 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அதேபோல், 75,000 தடைசெய்யப்பட்ட மருந்தான ப்ரீகாபலின் மாத்திரைகள் அடங்கிய மற்றொரு கடத்தல் முயற்சியையும் துபாய் சுங்கத்துறை முறியடித்தது.

சமீபத்திய சுங்கத்துறையின் நடவடிக்கைகள், சமூகத்தையும் தேசிய பொருளாதாரத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button