உலக செய்திகள்குவைத் செய்திகள்

குவைத்தில் புதிய EG.5 வைரஸ் கண்டறியப்பட்டதாக தகவல்

கொரோனா வைரஸின் திரிபு வகையான EG.5 வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நோயின் வீரியம் அதிகரிக்க கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு கூறி வருகிறது.

இந்நிலையில் குவைத்தில் புதிதாக EG.5 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுமார் 50 நாடுகளில் ஏற்கனவே இந்த வைரஸ்கள் பரவியுள்ளது. எனவே மக்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.மேலும், முக கவசம் அணிதல், சமூக விலகல் மற்றும் தடுப்பூசி போடுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சகம் மக்களை வலியுறுத்தியுள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button