ஹமாஸ் பயங்கரவாதத் தலைவரை இஸ்ரேல் பாதுகாப்புப் படை கொன்றுவிடும்- பாதுகாப்பு அமைச்சர் உறுதி

டெல் அவிவ்
ஹமாஸ் பயங்கரவாதத் தலைவர் யாஹியா சின்வாரை இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) கொன்றுவிடும் என்று பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் சனிக்கிழமை உறுதியளித்தார்.
இஸ்ரேல் இராணுவத்தின் ஓய்வுபெற்ற ஜெனரலாக இருக்கும் கேலன்ட், சனிக்கிழமை மாலை ஒரு மாநாட்டின் போது இதை அறிவித்தார்.
IDF ஏற்கனவே காசா நகரத்தை சுற்றி வளைத்துள்ளது மற்றும் காசா நகர மையத்திற்குள் நுழையும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களிடம் பேசிய கேலன்ட், “போருக்குப் பிறகு காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு இருக்காது. காசா பகுதியிலிருந்து இஸ்ரேலிய குடிமக்களுக்கு மீண்டும் எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது. இஸ்ரேல் ராணுவத்தின் வெற்றி தீர்க்கமாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, பணயக்கைதிகள் திருப்பி அனுப்பப்பட்டு, அப்பகுதியில் அமைதி நிலவும் வரை இஸ்ரேலிய ராணுவம் ஓயாது” என்றார்.
வெவ்வேறு பட்டாலியன்களின் தளபதிகள் உட்பட பத்து ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டதாக IDF அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹமாஸின் வான்வழித் தலைவர் அபு ரூபேக் மற்றும் அதன் கடற்படைத் தளபதி அபு சாஹினபா ஆகியோரும் IDF ஆல் படுகொலை செய்யப்பட்டனர்.