பள்ளிக் குழந்தைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்பு; 1,200 பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்

ஷார்ஜாவில் உள்ள அல் காசிமியா பல்கலைக்கழக திரையரங்கில் ‘அவர்களின் பாதுகாப்பு முதலில்’ (Their Safety First) என்ற கருப்பொருளுடன் பள்ளிக் குழந்தைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நிகழ்வு நடந்தது. இதில் மேற்பார்வையாளர்கள் உட்பட 1,200 பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, வரவிருக்கும் 2023-2024 கல்வியாண்டில் பள்ளி பேருந்துகளுக்குள் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மாணவர்களின் பாதுகாப்பில் நாம் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது. இந்த நிகழ்வு பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பை நிறைவு செய்யும் ஒரு கற்றல் அமர்வாக அமைந்தது. வாகனத்தில் ஏறும் போது, இறங்கும் போது மற்றும் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் போது, அத்தியாவசிய விதிகளை கையாள்வது பற்றி நாங்கள் கற்றுக்கொண்டோம்,” என்று ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.
வேக வரம்புகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து கடுமையான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், பள்ளிப் பேருந்தைச் சுற்றியுள்ள ஆபத்து காரணிகள் குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெற்றன.