நஃபிஸ் திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இரண்டு வழிகாட்டி புத்தகங்களை அறிமுகப்படுத்திய அமைச்சகம்!

மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) எமிரேடிசேஷன் மற்றும் தனியார் துறையில் எமிராட்டி நிபுணர்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட நஃபிஸ் (Nafis) திட்டம் பற்றிய விழிப்புணர்வு இயக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
MoHRE சமீபத்தில் அமைச்சகத்தின் இணையதளம் மற்றும் நஃபிஸ் (Nafis) மின்னணு தளங்களில் அணுகக்கூடிய இரண்டு வழிகாட்டி புத்தகங்களை அறிமுகப்படுத்தியது.
MoHRE நிபுணத்துவ வழிகாட்டல் துறையின் இயக்குனர் வெதாத் அல் ஷம்லான் கூறுகையில், “தனியார் துறையில் பணிபுரியும் அல்லது வேலை செய்ய விரும்பும் எமிரேட்டியர்களுக்கு நஃபிஸ் வழங்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வையும் அறிவையும் ஏற்படுத்த நாங்கள் ஆர்வமாக உள்ளோம். நஃபிஸ், எமிரேடிசேஷன் திட்டங்கள், அமீரகவாசிகள் தனியார் துறையில் இணைவதன் முக்கியத்துவம் மற்றும் நாட்டில் பொருளாதார மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னேற்றுவதில் நமது திறமையின் பங்கு போன்ற அனைத்தையும் தெளிவுபடுத்தும் வகையில் வழிகாட்டி புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.
புதிய வாய்ப்புகள்
MoHRE படி, தனியார் துறையில் UAE நாட்டினரின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதில் எமிரேடிசேஷன் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். நஃபிஸ் திட்டம், தனியார் துறையில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த எமிரேட்டியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பரந்த அளவிலான நிதி ஊக்குவிப்புகளை உள்ளடக்கியது.
MoHRE ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு வழிகாட்டி புத்தகங்கள் 11 தலைப்புகளை மையமாகக் கொண்டுள்ளது. நஃபிஸ் மின்னணு தளம், வேலைவாய்ப்பு உறவுமுறை சட்டம், போலி எமிரேட்டேஷன் மற்றும் அதன் நிர்வாக அபராதங்கள், வேலையின்மை காப்பீட்டுத் திட்டம், ஊதிய பாதுகாப்பு அமைப்பு (WPS), ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த தகவல்களை வழங்கும்.
போலி அமீரகம்
MoHRE கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து போலியான எமிரேடிசேஷன் வேலைகளில் மொத்தம் 824 UAE நாட்டினரை பணியமர்த்திய 565 நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தது. அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
“போலி எமிரேடிசேஷன் என்பது எமிரேடிசேஷன் தொடர்பான முடிவுகள் மற்றும் நஃபிஸ் திட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாகும் என்று MoHRE மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
எமிரேடிசேஷன் தொடர்பான ஏதேனும் மீறல்கள் இருந்தால் MoHRE கால் சென்டர் மூலம் 600590000 அல்லது அமைச்சகத்தின் ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலம் புகாரளிக்கலாம்.