துபாய்: முதலாளி வீட்டில் 80,000 திர்ஹம் தங்க நகைகளை திருடிய ஊழியர்

துபாயின் கராமாவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியின் ஊழியர் ஒருவர் தனது மேலாளரின் குடியிருப்பில் தங்க நகைகள் மற்றும் பிற பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலாளர் விடுமுறையில் சென்றிருந்தபோது, ஊழியர் குடியிருப்பின் சாவியை நகலெடுத்து மேலாளரின் வீட்டிற்குள் நுழைந்தார். மேலாளரின் வீட்டில் இருந்து 80,000 திர்ஹம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் அவரது பாஸ்போர்ட் ஆகியவை திருடப்பட்டுள்ளன.
பின்னர் திருடன், திருடப்பட்ட பொருட்களை தனது நண்பரின் வீட்டில் மறைத்து வைத்து விட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
கொள்ளை நடந்ததை அறிந்த பாதிக்கப்பட்டவரின் மகன், போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் திருடனின் நண்பரை கைது செய்து திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இரண்டு நபர்களும் தற்போது சட்டப்பூர்வ விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர்.