அமீரக செய்திகள்
துபாயில் 7-ம் வகுப்பு மாணவியின் மரணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்களைப் பகிர துபாய் நிர்வாகம் தடை விதித்துள்ளது

ஏழாம் வகுப்பு மாணவி இறந்தது தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட துபாயின் அட்டர்னி ஜெனரல் தடை விதித்துள்ளார். இறந்தவரின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளங்களில் இந்த சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதை அடுத்து எஸ்ஸாம் இசா அல் ஹுமைதான் இந்த முடிவை வெளியிட்டார்.
தடையில் அனைத்து அச்சு, ஆடியோ, காட்சி மற்றும் சமூக ஊடகங்களும் அடங்கும். சம்பவம் குறித்த தகவல்கள் அல்லது கருத்துகளை இந்த முடிவு தடை செய்கிறது.
முக்கிய விஷயங்களைப் பற்றிய தவறான தகவல்கள் சமூகத்தில் பீதியை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதையும் அட்டர்னி ஜெனரல் எடுத்துரைத்தார்.
#tamilgulf