இந்தியா செய்திகள்

ஜி-20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடு

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதையடுத்து ஜி-20 உச்சி மாநாட்டுக்காக டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. டெல்லி நகரம் முழுக்க சாலை சந்திப்புகள், சாலையோர கட்டிடங்கள் அனைத்தும் அழகுப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு தலைவர்கள் பயணத்துக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக டெல்லி மக்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் டாக்சி, ஆட்டோ ஆகியவை இயங்க கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக 2 லட்சம் பேர் கொண்ட பாதுகாப்பு படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வரும் தலைவர்களுக்காக 500 வகை உணவுகள் தயாராகி வருகின்றன. அந்த உணவுகள் தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட பாத்திரங்களில் வினியோகம் செய்யப்படும்.

டெல்லியில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு தலைவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு 17 மத்திய மந்திரிகளிடம் பிரித்து ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றத்தை தடுப்பதற்காக செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு தலைவர்கள் வந்து செல்லும் பகுதிகளில் 5 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button