அமீரக செய்திகள்
சாலைப் பணிகள் காரணமாக முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு

துபாய் சாலையில் இந்த வார இறுதியில் வாகனங்கள் செல்ல தாமதம் ஏற்படும். இது தொடர்பாக ட்விட்டர் என அழைக்கப்பட்ட X பக்கத்தில், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.
ஷேக் ரஷித் தெரு சந்திப்பில் உள்ள ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா தெருவில் வாகனங்கள் செல்ல தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 19 சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் ஆகஸ்ட் 21 திங்கட்கிழமை காலை 6 மணி வரை நடைபெற உள்ள சாலைப் பணிகள் மற்றும் போக்குவரத்து மாற்றுப் பணிகள் காரணமாக இந்த தாமதம் ஏற்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
#tamilgulf