கட்டிட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள்

தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்-ல் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக கருகி உயிரிழந்துள்ளனர். 43 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் சிரில் ரமபோசாவுக்கு குடியரசுத் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார். அந்த இரங்கல் செய்தியில், “கட்டிடத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
துபாயின் துணைத் தலைவரும், பிரதமரும், ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் துணைத் தலைவரும், துணைப் பிரதமரும், அமைச்சருமான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் ஜனாதிபதி ரமபோசாவுக்கு இதேபோன்ற இரங்கல் செய்திகளை அனுப்பியுள்ளனர்.