இந்தியா செய்திகள்

கடத்திச் சென்று ரூ.50 லட்சம் மதிப்புள்ள இரண்டு தங்க கேப்சூல்களை கொள்ளையடித்த நபர்கள் மீது வழக்குப்பதிவு

அகமதாபாத்
பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) அதிகாரிகள் போல் காட்டிக் கொண்ட இருவர் துபாயில் இருந்து நாட்டிற்கு வந்தவரை கடத்திச் சென்று ரூ.50 லட்சம் மதிப்புள்ள இரண்டு தங்க கேப்சூல்களை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட டேனிஷ் ஷேக் என்பவர் அக்டோபர் 9 ஆம் தேதி தெரிந்தவரின் வேண்டுகோளின் பேரில் துபாய்க்கு வந்துள்ளார். அவருக்கு டிக்கெட் மற்றும் தங்குமிடத்தை ஏற்பாடு செய்து, தங்கம் கடத்த ரூ.20,000 கொடுத்ததாக காவல்துறைக்கு தகவல் கொடுத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஷேக் தனது மலக்குடலில் இரண்டு தங்கக் காப்ஸ்யூல்களை மறைத்து, அக்டோபர் 28ஆம் தேதி அதிகாலையில் அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.

குடியேற்ற சம்பிரதாயங்களை முடித்த பிறகு, அவரை விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அவருக்குத் தெரிந்தவர் அனுப்பிய வேனில் சென்றார் என்று அந்த அதிகாரி கூறினார்.

முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) படி, இரண்டு பேர் ஏடிஎஸ் அதிகாரிகள் என்று கூறி வேனில் அவரை ஏற்றியுள்ளனர். பின்னர் கடத்தப்பட்ட தங்கம் பற்றி தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று ஷேக்கை மிரட்டிய இருவரும், தங்களுடன் ஏடிஎஸ் அலுவலகத்திற்கு வரும்படி கூறியுள்ளனர். பின்னர் அவரை ஒரு காரில் ஏற்றி உயரமான கட்டிடத்திற்கு அழைத்து சென்றனர். ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 10 வது மாடியில் வைத்து அவர்கள் ஷேக்கை தாக்கி, மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் காப்ஸ்யூல்களை வெளியே எடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.

பின்னர் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 850 கிராம் எடையுள்ள தங்கக் காப்ஸ்யூல்களையும், ஷேக்கிடம் இருந்த கொஞ்சம் பணத்தையும் இருவரும் எடுத்துக்கொண்டு ஆட்டோவில் பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று இறக்கிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், திருட்டு, கடத்தல், குற்றவியல் மிரட்டல் மற்றும் காயப்படுத்துதல் தொடர்பான எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷேக் காவல்துறையை அணுக பயந்ததால் புகாரளிப்பதில் தாமதம் ஏற்பட்டது, மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.எச்.பாண்டவ் கூறினார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button