ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 2 பேரை காணவில்லை

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்கரையில் செப்டம்பர் 7, 2023 வியாழன் அன்று இரவு 8.30 மணியளவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (ஜிசிஏஏ) விமான விபத்து விசாரணைப் பிரிவுக்கு அறிக்கை கிடைத்தது.
ஏ6-ஏஎல்டி என்ற பதிவெண் கொண்ட ஏரோகல்ஃப் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘பெல் 212’ ஹெலிகாப்டர், எகிப்து மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இரண்டு விமானிகளுடன் இரவு பயிற்சிப் பயணத்தில் ஈடுபட்டிருந்தபோது வளைகுடா கடலில் விழுந்ததாக ஜிசிஏஏ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இது அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் இடிபாடுகளை மீட்டுள்ளதுடன், பணியாளர்களை தேடி வருகின்றனர். விசாரணைக் குழு விபத்து நடந்த இடத்திற்கு விரைந்ததாக அறிக்கை கூறுகிறது.