ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகரிக்கும் இந்தியர்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்பான புதிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் கூறுகையில், “
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 3.419 மில்லியன் இந்திய மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் தற்போது அந்த எண்ணிக்கையானது 3.554 மில்லியனாக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் வேலை தேடும் இந்திய குடிமக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் பிரபலமான இடமாக உள்ளது.
மேலும், வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா குவைத், கத்தார் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் அதிகளவில் இந்தியர்கள் வாழ்கின்றனர். மேலும். துபாய், ரியாத், ஜித்தா ஆகிய இடங்களில் இந்திய அரசு வெளிநாட்டு இந்திய உதவி மையங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்கள் எளிதாக பயன் பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.



