இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து UAE வெளியுறவு அமைச்சர்- அல்பேனியா துணைப் பிரதமர் விவாதம்

வெளியுறவு அமைச்சரான ஹெச்எச் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், அல்பேனியாவின் துணைப் பிரதமரும் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சருமான பெலிண்டா பல்லுகுவை வரவேற்றார்.
அபுதாபியில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இருதரப்பு நட்புறவு மற்றும் பொருளாதாரம், வர்த்தகம், மேம்பாடு மற்றும் அரசு அறிவு பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.
கடந்த ஏப்ரலில் அல்பேனியா குடியரசிற்கு ஹெச்.ஹெச்.ஷேக் அப்துல்லா மேற்கொண்ட பயணத்தின் விளைவுகளையும், இரு நாடுகளுக்கும் இடையே அனைத்து துறைகளிலும் கூட்டு ஒத்துழைப்பின் வாய்ப்புகளை மேம்படுத்துவதில் அதன் பங்கையும் அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்.
ஹெச்.ஹெச் ஷேக் அப்துல்லா மற்றும் பெலிண்டா பல்லுகு இருவரும் எரிசக்தி மற்றும் காலநிலைத் துறையில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்தனர், குறிப்பாக UAE ஆனது இந்த ஆண்டின் இறுதியில் எக்ஸ்போ சிட்டி துபாயில் COP28 ஐ நடத்தத் தயாராகிறது.
பரஸ்பர அக்கறை கொண்ட பல விஷயங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். ஹெச்.எச்.ஷேக் அப்துல்லா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-அல்பேனிய உறவுகளின் முக்கியத்துவத்தையும், பல்வேறு நிலைகளில் அவற்றை மேலும் வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆர்வத்தையும் வலியுறுத்தினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் நட்புறவு மற்றும் கூட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தனது நாட்டின் விருப்பத்தை பெலிண்டா பல்லுகு தனது பங்கிற்கு வெளிப்படுத்தினார்.
இந்த சந்திப்பில் சர்வதேச ஒத்துழைப்புக்கான ராஜாங்க அமைச்சர் ரீம் பின்ட் இப்ராஹிம் அல் ஹஷிமி மற்றும் முதலீட்டு அமைச்சர் மொஹமட் ஹசன் அல் சுவைதி ஆகியோர் கலந்துகொண்டனர்.