அமீரகத்தில் 6 முக்கிய வேக வரம்பு மாற்றங்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாகனம் ஓட்டுபவர்கள், வேக வரம்பு எச்சரிக்கை பலகைகளில் கவனம் செலுத்துவது சாலச் சிறந்தது, ஏனெனில் சமீபத்தில் சாலை வேகங்களில் பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சாலைகளில் விபத்துக்களை தடுக்க, பாதுகாப்பை மேம்படுத்த வேக வரம்புகளை சரிசெய்வது ஒரு சிறந்த வழியாகும் என்று பல ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் வாகன ஓட்டிகள் சாலைகளில் வேக வரம்பு விதிகளை பின்பற்றி, பொறுப்புடன் ஓட்டினால், கடுமையான விபத்துகளை குறைக்கலாம்.
வழக்கமாக சாலை நிலைமைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளின் மதிப்பீடுகளுடன், தேவைக்கேற்ப வேக வரம்பு மாற்றங்களை நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் செய்கிறார்கள். கடந்த சில மாதங்களில், அபுதாபியில் இருந்து துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் வரை குறைந்தது ஆறு பெரிய திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏனெனில் வேகமாக வாகனம் ஓட்டுவது ஒரு பெரிய குற்றமாகும், இது 300 திர்ஹம் முதல் 3,000 வரை அபராதம் விதிக்கப்படும் வாகன ஓட்டிகள் இதை மனதில் கொள்ள வேண்டும். ஓட்டுநர் வேக வரம்பைத் தாண்டி எவ்வளவு வேகமாகச் செல்கிறார் என்பதைப் பொறுத்து அபராதம் அதிகரிக்கிறது. குறைந்தபட்ச வேகம் அறிவிக்கப்பட்டிருந்தால், அதற்குக் கீழே வாகனம் ஓட்டுவதற்கு அபராதமும் விதிக்கப்படும்.
சமீபத்தில் வேக வரம்புகள் மாற்றப்பட்ட சாலைகளுக்கான என்னென்ன மாற்றங்கள் என்று கீழே கொடுக்க பட்டுள்ளது:
ஸ்வீஹான் சாலை, அபுதாபி
அல் ஃபலாஹ் பாலத்திலிருந்து அபுதாபி சர்வதேச விமான நிலையத்தை நோக்கி செல்லும் ஸ்வீஹான் சாலையில் ஜூன் 4 முதல் வேக வரம்பு மணிக்கு 120 கிமீ வேகத்தில் இருக்கும். முன்னதாக, இது மணிக்கு 140 கிமீ வேகத்தில் அமைக்கப்பட்டது.
ஷேக் முகமது பின் ரஷித் சாலை, அபுதாபி
ஏப்ரல் முதல், அபுதாபி அதிகாரிகள் இந்த முக்கிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்ச வேகம் 120 kmph வேகத்தை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. மே 1 முதல், மீறுபவர்களுக்கு திர்ஹம்ஸ் 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கிமீ, ஆனால் ஓட்டுநர்கள், இடதுபுறத்தில் இருந்து முதல் மற்றும் இரண்டாவது பாதையில் இருந்தால், புதிய அபராதத்தைத் தவிர்க்க 120 கிமீ வேகத்தில் ஓட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறைந்த பட்ச வேகம் குறிப்பிடப்படாத மூன்றாவது மற்றும் நான்காவது பாதையில் மெதுவாக செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
துபாய்-ஹட்டா சாலை
ஜனவரி மாதம் தொடங்கி, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாய்-ஹட்டா சாலையில் வேக வரம்பை 100kmphல் இருந்து 80kmph ஆக குறைத்துள்ளது.
துபாய், அஜ்மான் மற்றும் அல் ஹொஸ்ன் ரவுண்டானாவில் 6 கிமீ நீளத்திற்கு இது பொருந்தும்.
மஸ்ஃபுட் மற்றும் முசைரா பகுதிகள், அஜ்மான்
துபாய் இந்த வேக குறைப்பு அறிவிப்புக்குப் பிறகு, அஜ்மான் காவல்துறை எமிரேட்டின் மஸ்ஃபவுட் மற்றும் முசைரா பகுதிகளில் அமைந்துள்ள ஹட்டா தெருவில் வேக வரம்பைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
மணிக்கு 100 கிமீ வேகத்தில் இருந்த வேக வரம்பு 80 கிமீ ஆக மாற்றப்பட்டு, திருத்தம் செய்யப்பட்டதைக் குறிக்கும் வகையில் வேக வரம்பு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அபுதாபி-அல் ஐன் சாலை
அபுதாபி காவல்துறை அபுதாபி-அல் ஐன் நெடுஞ்சாலையில் வேக வரம்பை மணிக்கு 160 கிமீ வேகத்தில் இருந்து 140 கிமீ ஆக குறைத்துள்ளது.
காவல்துறை மற்றும் அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தின் கூட்டு ஆலோசனையின்படி, அல் ஐன் நகரத்தின் திசையில் அல் சாட் பாலம் முதல் அல் அமேரா பாலம் வரை இது இப்போது பொருந்தும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரில், வேக இடையகங்கள் எதுவும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாடி மடிக் – கல்பா சாலை
இந்த அகலமான சாலையை சுற்றி குடியிருப்பு பகுதிகளோ அல்லது நகர்ப்புற மையங்களோ இல்லாததால், வேக வரம்பை மணிக்கு 80 கிமீ முதல் 100 கிமீ வரை அதிகரிக்க போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்தனர்.
E102 என்றும் அழைக்கப்படும் இந்த சாலை, ஃபுஜைரா எல்லையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாடி மாடிக் மற்றும் கல்பாவை இணைக்கிறது.