UAE:
ஓட்டுநர்கள் செய்யும் இரண்டு குற்றங்களுக்காக 20,000 திர்ஹம் அபராதத்துடன் சிறைத்தண்டனையை துபாய் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய பின் வாகனத்தை நிறுத்தாமல் இருந்தாலோ அல்லது டிரைவர் தப்பியோடி, காயம்பட்டவர்கள் இருந்தால் அபராதத்துடன் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசு தரப்பு வழக்குரைஞர்கள் எச்சரித்துள்ளனர்.
விபத்து காரணமாக காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஓட்டுநர் வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. விபத்து நடந்ததிலிருந்து ஆறு மணி நேரத்திற்கு மிகாமல் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு விபத்து குறித்து புகார் அளிக்க வேண்டும்.
அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக சாலையில் வாகனம் ஓட்டுவது தொடர்பான விதிமுறைகள் மற்றும் சட்டங்களை கடைபிடிக்குமாறு அனைத்து சாலை பயனாளர்களும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.