சவுதி செய்திகள்

பம்ப் மீட்டர் அளவீடுகளில் முறைகேடு செய்த 39 பெட்ரோல் நிலையங்கள் மூடல்

பம்ப் மீட்டர் அளவீடுகளில் முறைகேடு நடப்பதாகக் கண்டறியப்பட்டதையடுத்து, சவுதி அரேபியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள 39 பெட்ரோல் நிலையங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

19 கவர்னரேட்டுகளில் உள்ள ரீஃபில்லிங் ஸ்டேஷன்களில் வாகன ஓட்டிகளுக்கு விற்கப்படும் பம்ப் செய்யப்பட்ட எரிபொருளின் அளவைக் குறைக்கும் வகையில் சட்டவிரோதமான சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் கண்டுபிடித்தனர்.

அந்தச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டு, அவர்களுக்கு எதிராக வணிக விரோத மோசடி மற்றும் அளவீடு அளவுத்திருத்தச் சட்டத்தின்படி சட்ட நடைமுறைகள் எடுக்கப்பட்டுள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button