அமீரக செய்திகள்

சாலை விபத்தில் 2 பேர் பலி; 2 பேர் படுகாயம்

கடந்த வெள்ளிக்கிழமை காலை ஷேக் முகமது பின் சயீத் சாலையில் நடந்த பயங்கர சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து துபாய் காவல்துறையின் போக்குவரத்து பொதுத் துறையின் செயல் இயக்குநரான பிரிக் ஜுமா சலேம் பின் சுவைடன் கூறுகையில், “அதிகாலை 5 மணியளவில், அபுதாபி நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. முந்தைய வாகனங்களில் இருந்து பாதுகாப்பான தூரத்தை பிக்கப் டிரைவர் பராமரிக்கத் தவறியதால் விபத்து நடந்துள்ளது. இது டிரக்குடன் பின்புறமாக மோதியதில் இரண்டு நபர்கள் இறந்தனர். கடுமையான காயங்கள் அடைந்த 2 பேர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்” என்று கூறினார்.

வேக வரம்புகளை கடைபிடிக்கவும், வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும் துபாய் காவல்துறை வாகன ஓட்டிகளை வலியுறுத்தி வருகிறது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button