அமீரக செய்திகள்செய்திகள்

அபூதாபியில் சேவை கட்டணங்களுக்கு பணம் (Cash) ஏற்காது – ஏப்ரல் 1 முதல் புதிய நடைமுறை

மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை அறிவிப்பு; இனி மின்னணு கட்டண முறைகள் மட்டுமே பயன்பாடு

அபூதாபி: அபூதாபி மாநகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறை (DMT) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சேவை கட்டணங்களுக்கான பணப் பரிவர்த்தனைகள் (cash payments) முழுமையாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை புதன்கிழமை, ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

இதன் படி, அனைத்து சேவை கட்டணங்களும் இனி அங்கீகரிக்கப்பட்ட மின்னணு தளங்கள் மூலம் மட்டும் செலுத்தப்பட வேண்டும். இதில் TAMM, Dari, Smart Hub போன்ற டிஜிட்டல் சேவைகள் அடங்கும். மேலும், சேவை மையங்களில் கிரெடிட் கார்டு மூலம் கட்டணம் செலுத்தும் வசதியும் இருக்கும்.

அதிகாரிகள் தெரிவித்ததாவது, சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் வழங்கும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மிகவும் அவசரமான அல்லது விசேஷமான சூழ்நிலைகளில் மட்டும் வங்கி டெப்பாசிட் அல்லது பாதுகாப்பான டிஜிட்டல் payment link மூலம் கட்டணம் செலுத்த அனுமதி வழங்கப்படும்.

பொதுமக்கள் புதிய மின்னணு கட்டண முறைகளை பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button