அமீரக செய்திகள்

வீடியோ: மொராக்கோ கொடியால் ஒளிர்ந்த புர்ஜ் கலீஃபா!

அபுதாபி
மொராக்கோவை செப்டம்பர் 8, வெள்ளிக்கிழமை தாக்கிய பேரழிவுகரமான பூகம்பத்தை தொடர்ந்து செப்டம்பர் 10, ஞாயிற்றுக்கிழமை இரவு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள அடையாள சின்னங்கள், மொராக்கோ கொடியால் ஒளிர்ந்தன.

துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா மற்றும் அபுதாபியில் உள்ள அட்னாக் தலைமையகம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மொராக்கோ கொடியால் ஒளிரச் செய்யப்பட்டது.

X -ல் வெளியான பதிவில், UAE மீடியா அலுவலக சின்னமான கட்டிடங்களின் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, “எமிரேட்ஸில் இருந்து…எங்கள் இதயங்கள் மொராக்கோ மற்றும் அதன் மக்களுடன் உள்ளன” என்று பதிவிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மொராக்கோவுடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியது மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. பூகம்பத்தை அடுத்து மொராக்கோவிற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதியளித்துள்ளது. விமானப் பாலம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கிய நிவாரணப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லப்படும்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button