Site icon Tamil Gulf

உலக கோப்பை இறுதி போட்டி: ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறும் இந்தியா

The World Health Organization has called for an end to military operations in Gaza

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு அகமதாபாத் நகரில் துவங்கியது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக வித்தியாசமான முடிவை அறிவித்தது. அதை தொடர்ந்து பேட்டிங் செய்வதற்காக களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் ஆரம்பத்திலேயே 4 ரன்களில் ஸ்டார்க் வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனாலும் மறுபுறம் இத்தொடரில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடுவதை போல அசத்திய கேப்டன் ரோகித் சர்மா தம்முடைய பாணியில் விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார்.

இரட்டை உலக சாதனை: குறிப்பாக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 47 (31) ரன்களை 151.61 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார். மேலும் இந்த 3 சிக்சர்களையும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 86 சிக்ஸர்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

இருப்பினும் அவரைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் சற்று முன் வரை 14 ஓவர்களில் இந்தியா 94/3 என தடுமாற்றமாக விளையாடி வருகிறது. களத்தில் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் இந்தியாவை மீட்டெடுக்க நிதானத்துடன் விளையாடி வருகின்றனர்.

Exit mobile version