Site icon Tamil Gulf

அபுதாபியின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை!

weather alert

வியாழக்கிழமை காலை அபுதாபியின் சில பகுதிகளில் தூசி நிறைந்த வானிலை இருக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

NCM ஆலோசனையின்படி, இன்று காலை முதல் மாலை 4.30 மணி வரை, குறிப்பாக எமிரேட்டின் ஹப்ஷான் பகுதியில், கூடுதல் முன்னெச்சரிக்கையுடனும், புழுதிப் புயலுக்கு தயாராகவும் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இத்தகைய மோசமான நிலைமைகளின் போது, ​​சாலைகளில் மெதுவாகவும் கவனமாகவும் இருக்குமாறு ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அல் ருவைஸ், அல் மிர்ஃபர் மற்றும் லிவா, அல் ஐன் பகுதிகளுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியே செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Exit mobile version