Site icon Tamil Gulf

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.

Vijay Sethupathi

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் வருகிற மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

https://youtu.be/2hcbjZ1-pKw
Exit mobile version