அமீரக செய்திகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிலையற்ற வானிலை தொடரும்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று நிலையற்ற வானிலை நிலவும், சில பகுதிகளில் வெவ்வேறு தீவிரத்துடன் மழை பெய்யும்.
காற்று மிதமானதாக இருக்கும், சில நேரங்களில் பலமாக இருக்கும். தேசிய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புப்படி, மணல் மற்றும் தூசி சில நேரங்களில் வீசும்.
நாட்டில் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) கூறியுள்ளது.
அரேபிய வளைகுடாவில், கடல் அலை மிதமானது முதல் கொந்தளிப்புடன் இருக்கும், இன்று இரவு மற்றும் நாளை காலை கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். ஓமன் கடலில், கடல் மிதமானது முதல் கொந்தளிப்பாக இருக்கும்.
காற்றானது வடகிழக்கு முதல் தென்கிழக்கு திசையில் 10 கிமீ முதல் 30 கிமீ வேகத்தில் வீசும்.
#tamilgulf